Thursday 29 January 2015


மரம் நடுவோம் இன்றே " மழை பெறுவோம் நன்றே "


மரம் நடுவோம் இன்றே " மழை பெறுவோம் நன்றே "
கட்டில்,தொட்டில்,நடைவண்டி,வீடு கதவு ஜன்னல் எரிக்கும் கட்டை முதல் சவப்பெட்டி வரை மரம்தான்.. மரம்தான் ..மரம்தான்.. ஏனோ..! மனிதன் மறந்தான்.. மறந்தான் ..மறந்தான் .. (வைரமுத்து வைர வரிகள்)
.
மரம் நடுவோம் என்று சொல்வதைவிட இது நான் வைத்து வளர்த்த மரம் 
என்று நம் வருங்கால சந்ததியிடம் சொல்லி பெருமைப்படமுயற்சி செய்தால் நாடு செழிக்கும்..

மரம் காப்பதும் மனிதம் காப்பதும் வேறல்ல ..நாம்தான்
நிழல் தந்தது,காய்கனி தந்தது ,சுவாசிக்கும் காற்று தந்தது
வீட்டுக்கு பொருள் தந்தது ,மனிதா....!அதற்கு கோடரி காயம் தவிர எதை தந்தாய்..?
அன்னையை தொலைத்து தாய்மை தேடுவதுபோல்,மரங்களை வெட்டி
தென்றலை தேடுகிறோம்..!வனத்தின் அழிவாக துப்பாக்கியையும்...
மரத்தின் அழிவாக தோட்டாவையும் தயார்செய்து...
தற்கொலைக்கு துணியும் மனிதா ..!சிந்தித்துபார்..! :
மாற்றங்கள் உண்டு நிச்சயம்... மனிதன் மனம் வைத்தால்...
மண்ணின் வளமும், மரங்களால் செழிப்புறும்...
அசையும் மரங்களில் தான்..ஆக்ஸிஜன் பெறுகிறோம் ...
அசோகராக மாறி,சாலையெல்லாம் பசுமை ஆக்க வேண்டாம் ...
நம் வீட்டில் மரம் நட்டு சோலையாக ஆக்கலாமே மனிதா ..!
பெரியவங்கசொல்லுவாங்க.”.நாய் கொன்ற பாவத்தை,நதியில் போய் கழுவுவாய்...
நதி கொன்ற பாவத்தை,எங்கே போய் கழுவுவாய்.”..?
‪#‎நதிகள்‬ காணாமல் போக மழை இல்லை...!மழை காணாமல் போக.. மரங்கள் இல்லை..!
மரங்கள் காணாமல் போனால்... மனிதர்களே இல்லை..!
ஒரு காலக்கட்டத்தில் இப்படியும் நடக்கலாம் வறட்சியினால்....!
தன்னை எரித்த பின்னும் கரியாகி வைரமாகிறது ..இதுவும் காமதேனு தான் ..
அதை போற்றாவிட்டாலும் அதன் மடியை அறுக்க வேண்டாம்...
ஆறு குளம் நதியெல்லாம் நிரம்பிக்கிடக்கும்போது,முதன் முதல்ல தண்ணி வித்தவன பார்த்து ஊரு சிரிச்சது ..! காலம் கடந்தது பின் ”அவன்” அந்த ஊரயே பார்த்து சிரிச்சான்..!
இன்னும் கொஞ்ச நாள்ல ”காத்து வாங்கலயோ காத்துனு” விற்கப்போறான்.
அப்பவும் அவன பாத்து சிரிப்பிங்க ....காலம் கடந்துவிடும்..அதற்குள் விழித்துக்கொள்...
இல்லையெனில் ,அவன் நம்மையெல்லாம் பாத்து சிரிப்பான்.
ஏ ..!மனிதா.. இத்துடன் நிறுத்து உன் கொடூரத்தை...
மரங்களிலே ஊஞ்சல் கட்டி ஆடிய காலம் போக
இரும்பு சங்கிலியில் உஞ்சல் கட்டிஆடுகிற காலத்தில இருக்கோம்..!
மரங்களை அழிப்பதாக இருந்தால் அது சீமைகருவேலம் மரமாக இருக்கட்டும்
மரம் நட்டு அம்மரத்தின் தாயாகிவிடு...! அதை அழித்து அதற்கு காலன் ஆகிவிடாதே ...!
கவனம் ....
வனம்....
ந(ன)ம்
உயிர்நாடி...!!
மரம் வளர்ப்போம்..மண்வளம் காப்போம்.. மாமழை. பெறுவோம்
மனிதர்களை காப்போம்..மதம் மறப்போம்..!மண்ணின் உயிர்நாடி...யான மழையை வரச்செய்வோம்...
விழுதுகளின் சிந்தனைகளிலிருந்து...

--- facebook post